முச்சக்கர வண்டிக்குள் பச்சிலைம்பாம்பு



(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலையிலிருந்து வவுனியா சென்ற முற்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதியதில் முற்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி மூவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் தம்பலகாமம், தெலுங்கு நகர் பகுதியைச்சேர்ந்த ஆர்.நிரோஷினி (17வயது), விஜே நிர்மலா (23வயது), வீ.ராஜேஸ்வரி (39வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தம்பலகாமத்திலிருந்து வவுனியாவிற்கு கிறிஸ்தவ ஆலய வழிபாட்டுக்காக மொறவெவ பிரதேசத்தில் முற்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது முற்சக்கர வண்டியில் பயணித்த சிறுமியின் மேலில் பச்சிலைப்பாம்பு பாய்ந்துள்ளது.
இதனையடுத்து பாம்பு பாம்பு என கதறிய போது சாரதி திரும்பிய பார்த்த வேளை வேகமாக சென்ற முற்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.