நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், நீதிபதி கர்ணன் விதிக்கும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார்களை தெரிவித்தார்.
படத்தின் காப்புரிமைCALCUTTAHIGHCOURT.NIC.IN
பின்னர், அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு அரசாங்க மருத்துவர்களைக் கொண்டு மனநலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டதும் இப்பிரச்சனை மேலும் தீவிரமானது.
இதனால் கோபமுற்ற நீதிபதி கர்ணன், இதே போன்ற மனநலப் பரிசோதனைகளை மேற்கண்ட 7 நீதிபதிகளுக்கும் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Post a Comment
Post a Comment