லண்டனில், சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு



லண்டனின் தென்மேற்குப் பகுதியில் இயங்கிவரும் சுரங்க ரயிலில் (Tube Train) ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிச்சம்பவத்தை தீவிரவாத செயலாகத் தாம் அணுகுவதாக ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் இந்த ரயில், பயணிகளுடன் 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கியபோது, ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பையொன்றில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்துச்சிதறியது.
சத்தம் கேட்டு பயணிகள் ஓடியதில் பலருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த 18 பேரை வைத்தியசாலையில் அனுமதித்ததாக லண்டன் அம்பியூலன்ஸ் சேவை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.