அக்கரைப்பற்று A.B.சனூன் (Bsc) காலமானார்



#IsmailUvaizurRahman
அக்கரைப்பற்று,முதலியார் வீதியைப் பிறப்பிடமாவும், இரண்டாம் குறிச்சியிகை வதிவிடமாகவும் கொண்ட A.B. சனூன் (Bsc)  இன்று (15.09.2017) வபாத்தானார். யாழ்ப் பல்கலை விஞ்ஞானப் பட்டதாரியான இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி, மருதானை சாஹிரா கல்லுாரியிலும் ஆசிரியராகவும் கடமை புரிந்தவர்.மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி, பின்பு இலங்கையின் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிந்தவர்.

இவர் அபுபக்கர் ஆசிரியரின் மூத்த மகனும், Dr. அனிஸினதும் சகோதரும், பொத்துவில் தொகுதி முன்னாள் பா.உறுப்பினருமான மர்ஹூம் உதுமாலெப்பையின் மருமகனும்(மகளின் கணவர்) ஆவார்.

யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...