எழில் கொஞ்சும் “லவர்ஸ்லீப்”.




(க.கிஷாந்தன்)

நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள்.

பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம்.

மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம்.

நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்பதற்காக வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மலையக பகுதியின் எழில் கொஞ்சும் அழகோ தனி அழகு.

அந்தவகையில் நுவரெலியா – ஹாவாஎலிய, பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பிதுருதலாகலை வனப்பகுதியில் லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந் நீர்வீழ்ச்சி பழமையான நீர்வீழ்ச்சி என்பதால் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவது அதிகமாக காணப்படுகின்றது.

தற்போது நிலவும் மழை மற்றும் வெயிலுடனான வானிலை காரணமாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவதுடன், இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் தவறுவதில்லை.