இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதை நிறுத்த ரஷ்யா தீர்மானம்?



இலங்கையிலிருந்து தேயிலை கொள்வனவு செய்வதை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இடைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வௌியிட்டுள்ளது.
நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பக்கெட் ஒன்றுக்குள் பூச்சி ஒன்று இருந்ததாக தெரிவித்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதில் ரஷ்யாவும் துருக்கியும் முன்னணி நாடுகளாக உள்ளன.
இலங்கை தேயிலைச் சபையின் அறிக்கைக்கு அமைய, வருடத்தின் முதல் 09 மாத காலப்பகுதிக்குள் துருக்கி 27 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.
அத்துடன், அதனால் நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 19.8 பில்லியன் ருபாவாகும்.
735 ரூபாவிற்கு ஒரு கிலோ தேயிலை கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
எனினும், ரஷ்யா ஒரு கிலோ தேயிலையை 783 ரூபாவிற்கு கொள்வனவு செய்து வந்ததாக இலங்கை தேயிலைச்சபை தெரிவித்தது.