
-எஸ்.ரி.ஜமால்டீன்-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் கடந்த சனிக்கிழமை (26) பிற்பகல் ,ரு குழுக்களுக்கிடையில், இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களில் , இக்பால் உசைக் அஹமட் (20 வயது) என்ற ,இளைஞன் தலையில் ஏற்பட்ட படுகாயத்தையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் அக்கரைப்பற்றுக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. அக்கரைப்பற்று 1ஆம் குறிச்சி பழைய சினிமா வீதியில் வசித்துவரும் குடும்பப் பெண்ணெருவரின் நடத்தை பற்றி அயலவர்கள் சிலர் பிழையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர்.
.இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் விமர்சிப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.வாக்குவாதம் கடந்த சனிக்கிழமை (26) பிற்பகல் வேளையில் மோதலாக மாறி ,இருசாராரும் கத்தி,பொல்லுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஒருசாரார் மிளகாய்தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் ,தன்போதே உசைக் அஹமட் தாக்குதலுக்குள்ளானார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் சம்பவ ,இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து படுகாயமடைந்த உசைக் என்பவர் தாக்குதலுக்கு உள்ளான சந்தர்ப்த்தில் மேதலில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட நால்வரையும்,மிளகாய்தூள் வீசிய சிறுவன் ஒருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் ,இஸ்மாயில் உவைசுர் றஹ்மான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டபோது ,ருவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் இரு சிறுவர்களையும் மறுநாள் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஒருவரை பிணையில் விடுவித்தார்.
திங்கட்கிழமை, இரு சிறுவர்களும் மன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது இம்மதாதம் 31 ஆம் திகதி நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான பீற்றர் போல் உத்தரவிட்டார்.தாக்குதலுக்கு உள்ளான உசைக் என்பவரை தாக்கியமை தொடர்பாக ,ரு சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர்.பிணையில் விடுவிக்கப்பட்டர் தாக்குதலுக்க உள்ளானவரின் உறவினர். இச் ச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணும்,ஒரு ஆணும் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment