மரம் சரிந்து வீழ்ந்து



(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மரம் சரிந்து வீழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இந்த சம்பவம் 19.07.2018 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக, குடியிருப்பிற்கு அருகில் இருந்த மரம் சரிந்து வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.
இதில் ஒரு வீடும், மற்றொரு வீட்டின் சமையலறையும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், இதில் வீடுகளிலிருந்த சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக திம்புள்ள கிராம சேவகருக்கும், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாகவும், மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.