(#புலானய்வுச் செய்தியாளர்)
2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன் 2015 ஒக்டோபர் முதல் கைது செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக விளக்க மறியிலில் வைக்கப் பட்டுள்ளார்.
இவ் வழக்குக் குறித்த உண்மை விளம்பல் விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில் நேற்று (18) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்திரகாந்தன் சார்பில் வழமையாக ஆஜராகும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் எவரும் பிரசன்னமாகாகத நிலையில் எதி்ர்வரும் செப்ரம்பர் மாதத்தின் தினம் தொடர் விசாரணைக்கென வழங்கப்பட்டிருந்தது.
அப்போது கண் கலங்கிய பிள்ளையான். தாம் சுமார் 1006 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். .மேலும், அங்கு பிறிதொரு வழக்கில் ஆஜராக இருந்த முன்னாள் நீதிபதியும், இன்னாள் சட்டத்தரணியுமான சந்திரமணியின் உதவியை பிள்ளையான் தரப்பு கோரியுள்ளது.
மேல் நீதிமன்ற ஓய்வு நிலை நீதிபதி சந்திரமணி பிள்ளையானின் ஆதங்கத்தை முன் வைக்க மேல் நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தார்.(காரணம் யாதெனில், சட்டத்தரணி சந்திரமணி அன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் நீதிபதியாக கடமை புரியம் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கொலைக் குற்றமென்பதால், பிள்யைானின் மனு அன்று நிராகரிக்கப்பட்டது)
மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி இர்சடீன் அனுமதி நேற்றுக் கிடைத்ததும் தமது சமர்ப்பணத்தை சட்டத்தரணி சந்திரமணி முன் வைத்திருந்தார்.
பபங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கொலைக் குற்றத்துக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர் நீண்ட நாட்களாக விளக்க மறியிலில் இருந்து வருவதால்,எதிர்வ்ரும் செபரம்பர் மாதம் வரைக் காத்திருப்பது சற்றுக் கடினமானதெனவும், செப்ரம்பர் மாதத்திற்கு முன்னர் உள்ள திகதியினை மன்று தோதெனக் கருதின் வழங்குமாறும் வேண்டியிருந்தார்.

இதனை அனுமதித்த மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் சந்திரகாந்தன் உட்பட ஐவரின் விளக்கமறியல் தினத்தை முன்நோக்கி நகர்த்தி, எதிர்வரும் 30.08.2018 வரை விளக்க மறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும்,கொலைக் குற்றத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையானை பிணை வழங்க சட்டப்படி முடியாதென்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக , நீதியின் காவலனாக, அன்று செயற்பட்ட, சந்திரமணி கட்டளையாக்கியிருந்தார்.
ஆனால்,இன்றோ பிள்ளையானுக்கு, வழக்குத் திகதியை சற்று முன் நோக்கி தரும்படி சட்டப்படி வேண்டிமுள்ளார்.
சட்டம் தன் கடமையைச் செய்ய வெண்டும் மென்று சட்டத்தரணியாக சந்திரமணி மீண்டும் மட்டக்களப்பில் வாதிட்டுள்ளார்.

(சந்திரமணி மெடம்! இது பராயச் சித்தமா?அல்லது பாவமன்னிப்பா? அல்லது கருணை மனுவா?)

Post a Comment
Post a Comment