மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு தடை




இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் எதிர்வரும் 31ம் திகதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இக் காலப் பகுதியில் மாதிரி வினாக்களை அச்சிடல் மற்றும் அது குறித்து கலந்துரையாடுதல், கருத்தரங்குகளை நடத்துதல், கையேடுகளை விநியோகித்தல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த தடை செப்டம்பர் மாதம் 01ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பதுடன், தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான தடை ஆகஸ்ட் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. 

இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.