கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும்




நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் இந்நிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சப்ரகமுவ, மேல், வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் இந்நிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.