(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வளத்தாபிட்டியில், வேன் ஒன்றுடன் ரிப்பர் மோதியதில், தவுலகலை அல்-மனார் ஆசிரியை ஷியானா மற்றும் கணவர் உயிரிழந்துள்ளனர். அவர்களது புதல்வி அம்பாரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த அவர்களது வேனில்,கல்முனையிலிருந்து அம்பாரை நோக்கிச் சென்ற ரிப்பர் மோதுண்டுள்ளது.
சம்மாந்துறைப் பொலிசார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Ceylon24 இணையம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை இவரது பிரிவால் வாடும் ஒரேயொரு புதல்விக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரிவிக்கின்றது.


Post a Comment
Post a Comment