இயந்திர வயல் நாற்று நடுகை

எஸ்.கார்த்திகேசு
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில், திருக்கோவில் பிரதேச செயலகம், தம்பிலுவில் கமநல சேவைகள் திணைக்களத்தின் எற்பாட்டில், கோம்பக்கரச்சி கீழ் கண்டம் விவசாய அமைப்பின் அனுசரனையுடன், இயந்திரம் மூலமாக வயல் நாற்றுகள் நடும் விழா, இன்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.
இந்நிகழ்வு, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பளார் எம்.எஸ்.ஏ.கலீம் தலைமையில், காஞ்சிரம்குடா வயல் பகுதியில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.
இதன்போது, திருக்கோவில் பிரதேசத்தில் முதற்றடவையாக முளைக்கவைக்கப்பட்ட நாற்றுக்களை, இயத்திரத்தின் உதவியுடன் வயலில் நடுகை செய்யப்பட்டதுடன் விவசாயிகளுக்கு, இம்முறையின் நன்மைகள் தொடர்பாக விரிவான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இயந்திரத்துக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் விவசாயிகளுக்கான சான்றிதழ் பத்திரங்களும், மாவட்ட விவசாயப் பணிப்பளார் எம்.எஸ்.ஏ.கலீமினால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், பிரமத அதிதியாகக் கலந்து கொண்டதுடன் நிகழ்வில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீம், உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.தேவராணி, தொழில்நுட்ப உதவியாளர் கே.சமரசிங்க, விவசாயப் போதனாசிரியர் கே.கங்காதரன், பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.தவநேசன், திருக்கோவில் பிரதேச செயலக விவசாயப் பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டிருந்தனர்.