நிறைவேற்றம்

(க.கிஷாந்தன்)
கொட்டகலை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 9 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன்நிறைவேற்றப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் 2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் ராஜமணி பிரசாத்தினால்சமர்ப்பிக்கப்பட்டது.
இவ் வரவு செலவு திட்டமானது கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பிரதேச மக்களினதும் தேவைகளைமுன்னுரிமைபடுத்தியதான விசேட வேலைத் திட்டங்களை உள்ளடங்கிய வரவு செலவு திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டபிரதேச சபை உறுப்பினர்கள் 9 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 07 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 01 உறுப்பினரும்,இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் 01 உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 06 உறுப்பினர்களும், ஜே.வி.பி கட்சியை சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்.
இவ்வரவு செலவுத் திட்டத்தில் மொத்த வருமானம் 5,17,13,974 ரூபாவில் 2019ம் ஆண்டுக்கான மொத்த செலவாக 4,57,93,166ரூபாய் எனவும், என்னால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு நன்றிகளையும்தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.


--- Advertisment ---