கலந்துரையாடல்(அப்துல்சலாம் யாசீம்) 

கிண்ணியா நகர சபை அமர்வுகளில் உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப் பட்ட பின்வரும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (27) காலை தவிசாளர் எஸ். எச். எம். நளீம் தலைமையில் கிண்ணியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

1) தனியார் கல்வி நிலையங்களும் எதிர்நோக்கப் படும் பிரச்சனைகளும்

2) வீதியோர இளைஞர்களால் பாடசாலை செல்லும்  மாணவிகளுக்கு ஏற்படுத்தப் படும் இன்னல்களை இல்லாமல் செய்தல்

3) போதையற்ற  கிண்ணியாவை உண்டாக்கும் முகமாக கிண்ணியா கடைகளில் விற்கப்படும் புகையிலை சார் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை இல்லாமல் செய்தல்

போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி, உலமாசபை தலைவர் , சூரா சபை தலைவர் , உறுப்பினர்கள்,  பள்ளி சம்மேளன தலைவர், பொலீஸ் உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,  என பலர் கலந்து கொண்டனர். 

இப் பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசப் பட்டதுடன் அவற்றுக்காக எடுக்கப் படும் நடவடிக்கைகள்  பற்றியும் நடபடி முறைகள் பற்றியும் தீர்மானிக்கப்பட்டன


--- Advertisment ---