சந்திப்பு




(அப்துல்சலாம் யாசீம்) 

அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் கல்வியமைச்சரை சந்தித்தது

கடந்த ஆறு மாதங்களாக இழுபறிநிலையை கொண்டு காணப்படும் அரச பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக வழங்க கோரி அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்களை 2018/12/26ம் திகதி புதன் கிழமை நேரில் சென்று சந்தித்தினர்.

கடந்த ஆறு மாதங்களாக இழுபறிநிலையை கொண்டு காணப்படும் குறித்த நியமனத்தால் 3850 இளைஞர்,யுவதிகள் எதிர் கொண்டுள்ள வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி இச்சந்திப்பின் போது கல்வியமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டது.இவ் வருடம் ஜுலை மாதம் நிமனங்கள் வழங்கப்படும் என சில மாகாணங்கள் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டமையினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்த தொழில்களை விட்டு நியமனத்திற்காக தயாராகி இருந்தார்கள் என்பதையும் கல்வியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்த கல்வியமைச்சரின் குறித்த நியமனமானது வழங்கப்பட வேண்டுமாயின் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் 2019 ஜனவரி மாதம் 2ம் திகதி அமைச்சரவையில் சமர்பிப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.

கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் குறித்த காரணத்தை கடந்த ஆறு மாதங்களாக கூறி வருகின்றார்.எனவே குறித்த நியமனத்தை இனியும் தாமதிக்காமல் விரைவாக வழங்க வேண்டும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் வினயமாக வேண்டிக் கொண்டார்கள்.

குறித்த சந்திப்பில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.