இலங்கை கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை!

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, இலங்கையில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
EUROPHYT அறிவித்தலின் மூலம், இலங்கையில் இருந்து, கறிவேப்பிலைகளைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாடுகளுக்கு வரும் பயணிகள் இலங்கையில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து இத்தாலிய விமான நிலையங்களுக்கு வந்தவர்களின் பைகளில் இருந்து கறிவேப்பிலைகளை, இத்தாலிய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து வந்தனர்.
இலங்கை கறிவேப்பிலைகளில் ஆபத்தான உயிரிகள் இருக்கின்ற என்ற அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அவற்றை எடுத்து வருவதற்கு, கடந்த 24ஆம் திகதி தொடக்கம் தடைவிதிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


--- Advertisment ---