சிவப்பு உடையுடன் வந்த பெண்ணுக்கு நீதிவான் எச்சரிக்கை

நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை ,மல்லாகம் நீதிவான் எச்சரித்தார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில் நேற்றுக் காலை ஆரம்பமானது.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்த பெண் ஒருவர் சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்.
அவரது ஆடை தொடர்பில் விசனம் தெரிவித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமாக சமூகமளிக்க வேண்டும் என்று எச்சரித்தார். ஒழுக்கமுடைய இடமாக நீதிமன்றம் உள்ளது என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.


--- Advertisment ---