துப்பாக்கி சூட்டில் சுதுஹகுரு சுமித் பலி



தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். 

இன்று (10) மதியம் 12.20 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் இருவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் 42 வயதுடைய சுதுஹகுரு சுமித் எனும் வசந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 4 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.