பாகிஸ்தானில் புகழ்பெற்ற சூஃபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 6 பேர் பலி


பாகிஸ்தானில் உள்ள லாகூரில் புகழ்பெற்ற சூஃபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் செய்தி ஊடகமான ஜியோ நியூஸ் செய்தியின்படி மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
போலீஸ் வாகனம் ஒன்று தாக்கப்பட்டதாகவும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
தெற்காசியவில் உள்ள மிகப் பழமையான சூஃபி புனிதத்தலத்தில் இந்த வெடிகுண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள சமயத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் சுன்னி, ஷியா பிரிவை சேர்ந்த பலர் இங்கு வருகை தருவர்.
இந்த புனித்ததலத்தில் 2010ஆம் நடைபெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.