மாங்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்றவர் மூழ்கினார்

வாகரை மாங்கேணி கடலில் கரைவலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

மாங்கேணி கடலில் கரைவலை மீன் பிடிக்கச் சென்ற வேளை வலையை இழுப்பதற்கு படகில் இருந்து பாய்ந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாங்கேணியைச் சேர்ந்த 18 வயதுடைய க.தவசீலன் என தெரியவந்துள்ளதாகவும் இவர் திருமணம் செய்து பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். 

இவருடன் மீன் பிடிக்க இன்னுமொருவர் சென்றதாகவும் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)


--- Advertisment ---