பெருந்தொகைக் கஞ்சாக்களை வைத்திருந்த அட்டாளைச்சேனை வாசிகளுக்கு விளக்க மறியல்

பெருந்தொகையான கேளரக் கஞ்சாக்களை வைத்திருந்த இரு பெண்கள் உட்பட மேலும் ஒரு ஆணையும்  ஐீன் மாதம் 13ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் பெருமாள் சிவக்குமார் இன்று கட்டளையிட்டார்.

குறித்த கஞ்சாக்கள் முச்சக்கர வண்டியொன்றின் சாரதி ஆசனத்தின் கீழும், ஏனைய பணிகளான இரு பெண்களின் ஆடைகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

சந்தேக நபரான முச்சக்கர வண்டி செலுத்துனரும் ஏனைய இரு  சந்தேக நபரான பெண்களும் கல்முனை,அக்கரைப்பற்று வீதியில் குறித்த வாகனத்தில் செல்லும் போது, கைதாகியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் அட்டாளையைச் சேர்ந்தோர்களாவர். சந்தேக நபர்களிமிருந்து 41 000 மி.கி, 41 600 மி.கி.51 600 மி.கி அளவில் கஞ்சாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


--- Advertisment ---