நிகாப் அணிந்து சென்ற பெண் கைது

சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியை நிகழ்வில் கலந்துகொள்ள முகத்தை மூடிய ஆடையுடன்  வந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இந்தப் பெண்ணின் கணவனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
23 வயதுடைய இப்பெண் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், இவரது கணவர் (26) புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், திருமணத்தின் பின்னர் சிலாபத்தில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விரு சந்தேகநபர்களும் சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.