நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைதுசெய்யுங்கள்!

“நீர்கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் அரசு கைதுசெய்ய வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மத வன்முறை, இன வன்முறை இந்நாட்டில் இனிமேல் வேண்டாம். இவை மீண்டும் நடைபெறாதவாறு அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
முப்படையினரும் பொலிஸாரும் பக்கச்சார்பின்றி தமது பணிகளைச் செய்ய வேண்டும்” – என்றார்.