5 இராணுவ வீரர்கள் பலி,இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதியதியதில்

கிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் இருப்பாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவ மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

புகையிரதம் அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி புகையிரத பாதையினை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும் எனவும் இதற்கு முன்னரும் இரண்டு விபத்துக்களில் மூவர் இப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)


--- Advertisment ---