அடுத்த ஜனாதிபதி உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும்


அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். 

நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அரசியலின் ஊடாக நாட்டின் எல்லா பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய முடியாமல் இருப்பினும் பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசியலின் ஊடாக நாட்டின் பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அதற்கு பலம் வாய்ந்த தலைவர் ஒருவர் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் எதிர்வரும் தேர்தலின் ஊடாக நியமிக்கப்படும் ஜனாதிபதி குறைந்தது உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.