மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் பிணையில்

மே மாதம் 13ஆம் திகதி மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன்  தொடர்புபட்டவர்களென, சந்தேகதத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்கள் தலா இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
--- Advertisment ---