அக்கரைப்பற்றில் கொள்ளைக்குத் துணைபோன இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்க மறியல்

அக்கரைப்பற்றில் அண்மையில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டோருக்கு் தொலைபேசித் தொடர்பாடலில் துணை புரிந்தவரும் குறித்த சம்பவத்தின் 5 வது சந்தேக நபரான அக்கரைப்பற்று இராணுவ முகாமைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி ஒருவர், கடந்த வெள்ளியன்று மாலை அக்கரைப்பற்று பொலிசாரினால், அக்கரைப்பற்று நீதிபதி பெருமாள் சிவக்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். 

குறித்த சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னரும் பின்னரும்  சுமார் 1300 இற்கும் மேற்பட்டோருடன்  தொடர்புகள் இச் சந்தேக நபரால் மேற் கொள்ள்பட்டதாகத் தெரியவருவதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.இதனடிப்படையில், இவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


அண்மையில், இராணுவப் புலனாய்வுப் பிரவினர் என்று அக்கரைப்பற்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்ட்டு விளக்கமறியலில் இருந்து  வந்த இராணுவ அதிகாரி உள்ளிட்ட 4  பேருக்கு, அடையாள அணி வகுப்பு க்கள் கடந்த வெள்ளியன்று ,அக்கரைப்பற்று நீதிம்ன்றில்  பதில் நீதிபதி ஆர்கிலா முன்பாக இடம்பெற்றது.குறித்தத கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் முறைப்பாட்டுக்காரர்களால் அடையாளங் காணப்பட்டு எதிர்வரும் 24 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


--- Advertisment ---