மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அவசரகால சட்டம் நீடிப்பு


நாட்டினுள் ஒருபோதும் சரீயா பல்கலைக்கழகம் இருந்ததில்லை என்று மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார். 

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

அவசரகால சட்டத்தை நீடித்ததானது, இதனை செய்வதற்கு தேவையான காலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகும் என்று அவர் கூறியுள்ளார். 

தான் பதவியில் இருந்து விலகிய போதிலும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவதை நிறுத்தவில்லை என்று கூறியுள்ளார். 

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார்.