ஜனாதிபதி வேட்பாளருக்கு எவ்வாறு ஆதரவளிப்பதில் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம்

(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்குதமிழ் முற்போக்கு கூட்டணியாகாவா அல்லது மலையக மக்கள்முன்னணியாகவா ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக மலையக மக்கள்முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வட்டவலை - மவுன்ஜின் தோட்டத்தில் 18.07.2019 அன்று இடம்பெற்ற பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர்ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.அதன் பின்னரே எதனையும் அறிவிக்க முடியும்எங்களது அபிவிருத்தி வேலைகளை இலகுவாக செய்யக் கூடிய அரசாங்கங்களை உருவாக்க கூடியதாக இருக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்திற்குள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நாடு இன்று நிலை குழம்பி போயிருக்கின்றது. எனவே மீண்டும் அவ்வாறு ஒரு விரிசலை ஏற்படுத்த இடமாளிக்க கூடாது.
பிரதான கட்சியினூடாக தங்களது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்ததன் பின்னர் நாங்கள் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்போம் என்றார்.


--- Advertisment ---