பயிற்சி பட்டறை

( அப்துல்சலாம் யாசீம்) 

ஊடக அமைச்சும் - இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்று (10) திருகோணமலையில் ஆரம்பமானது. 

பிரச்சினைகளை அறிக்கையிடலும் ஊடகவியலாளர்களில் பொறுப்புக்களும் எனும் தலைப்பிலான  இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக ஊடகவியல் தொடர்பான கற்கை நெறிகளைச்சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இச் செயலமர்வில்  அரசாங்க தகவல் திணைக்களத்தில் பணிப்பாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான நாலக கலுவெவ கலந்து சிறப்பித்தார். 

அத்துடன் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் சட்டத்தரணி கொக்கல வெல்லாவ பந்துல, ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா என பலரும் கலந்து கொண்டனர். 


--- Advertisment ---