#தோப்பூர் : விபத்தில் இளைஞன் பலி

#ACCIDENT
ஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், யு.அ.கீத், அப்துல்சலாம் யாசீம்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாரதிபுரம் சந்தியில், இன்று (13) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிள், அதன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலிக் கம்பம் ஒன்றில் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 
இந்த விபத்தில், தோப்பூர், ஜின்னா நகரைச் சேர்ந்த நாஸிக்கின் முஹமட் றிஸ்லான் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில், மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


--- Advertisment ---