சாரதிகள் அவதானம்

(க.கிஷாந்தன்)
அட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான வீதியில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான வீதிதாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்த சம்பவங்கள்பதிவாகியுள்ளனஇதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின்மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன்செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


--- Advertisment ---