`அபிநந்தனை உடனே விடுவித்தோம்; எல்லாம் இதற்காகதான்!’ - ஐ.நாவில் இம்ரான்கான் #Abhinandan #ImranKhan


இம்ரான் கான், ``வழக்கமான போர் ஆரம்பமானால், எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நாடு 7 மடங்கு அண்டை நாட்டை விட சிறியதாக இருக்கும்பட்சத்தில், சுதந்திரத்துக்காக உங்கள் மரணம் வரை நீங்கள் ஒன்று சண்டையிடவேண்டும் அல்லது சரண்டைய வேண்டும்.
``சிறப்பந்தஸ்து நீக்கப்பட்டதை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? காஷ்மீரில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்..இம்ரான் கான்.
`நாங்கள் என்ன செய்யபோகிறோம்’ இந்த கேள்வி நானே எனக்குள் நானே கேட்டுக்கொள்கிறேன். என்னைப்பொறுத்தவரை கடவுள் ஒருவர் தான். அணுஆயுத நாடு ஒன்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும்போது, அது மிகபெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தானில் போராளி அமைப்புகள் எதுவும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் குரல் கோபத்துடன் தான் இருக்கிறது. தீவிரவாதம் மனிநேயத்துக்கு எதிரான சவால். ஆகவே, நாம் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடவேண்டும்” என்றார். காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், ``பில்லியன் மரங்களை நம் நாட்டில் நட்டு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், ஒரு நாடு மட்டும் இதனை தனியாக சாதித்துவிடமுடியாது.
imran khan
imran khan
காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்களை எதிர்ப்பதில் பணக்கார நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. மேற்கு உலகம் இஸ்லாம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று வெறுப்பு உருவாக்கப்படுகிறது. சிறப்பந்தஸ்து நீக்கப்பட்டதை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? காஷ்மீரில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு அவர்களும் வெளியே வருவார்கள், அப்போது, ராணுவம் அவர்களை சுட்டுத்தள்ளும்” என்றார்.
புல்வாமா தாக்குதல் :
புல்வாமா தாக்குதல் பற்றி பேசிய அவர், `புல்வாமா தாக்குதலின் போது, இந்தியா எங்கள் மீது குற்றம் சுமத்தியது. பாகிஸ்தானின் தலையீடு இருந்தது குறித்து இந்திய அரசு ஆதாரங்களை சமர்ப்பிக்க நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் விமானங்களை அனுப்பி எங்கள் மீது குண்டுவீசினார்கள். நாங்கள் பதிலடி கொடுத்தோம்; அவர்களின் ஒரு பைலட்டை நாங்கள் விடுவித்தோம். நாங்கள் உடனடியாக அவரை விடுவித்ததற்கு காரணம், அமைதியை விரும்பும் காரணத்தால்தான். இதனை சமாதான நடவடிக்கையாக எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, மோடி `பாகிஸ்தானுக்கு எதிரான பாடத்தை கற்பிப்போம்’ என்று பிரசாரம் செய்துவருகிறார்” என்று பேசினார்.
`தவறவிட்டுட்டேன்; சும்மாவிடப் போவதில்லை!'‍- காஷ்மீர் விவகாரத்தில் யு.எஸ்-ஸில் பொங்கிய இம்ரான் கான்