விசேட கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான்

அம்பாரை மாவட்டம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை ( 24) காலை 9 மணியளவில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விசேட கலந்துரையாடல்அம்பாறை மாவட்ட மனித உரிமை ஆணைக் குழுவின் இணைப்பாளர் ஏ. எல். இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றை எவ்வாறு அணுகி தீர்வைப் பெற்றுக்கொள்வது குறித்து மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.


கமிட் நிறுவன திட்டமிடல் பணிப்பாளர்  கே . காண்டீபன் அவர்கள் வழவாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு சவால்களை எதிர்கொள்வது குறித்து தெளிவுபடுத்தினார் ... 

அங்கு கருத்துகூறுகையில்....

மாற்றுத்திறனாளிகள் தங்களை தாழ்த்திக்கொள்ளக்கூடாது. எமது பிரச்சினைகளை நாம் உரியவர்களிடம் எடுத்துவைக்க வேண்டும் அப்போதுதான் நமது உரிமைகள் நிலைநாட்டப்பட்டு நமது எதிர்கால சந்ததிக்கும் குறித்த பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்படும்.

மாற்றுத்திறனாளிகள் என்பது குறித்த காலத்தோடு மாத்திரம் நிற்கப் போவதில்லை காலத்திற்கு காலம் விசேட தேவையுடையோரும் வாழ்ந்து கொண்டுதான் வருகின்றனர்.


நமக்குரிய பிரச்சினைகளுக்கு நாம் குரல் கொடுக்க மனித உரிமை ஆணைக்குழு இலங்கை இலவச சட்ட மையம் போன்றன நமது உரிமைகளை நிலைநாட்ட இருக்கின்றன.


அரசாங்கம் ஒவ்வொருவருக்கும் சமான உரிமைகளை வழங்குகிறது. மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் தனி ஒரு நபருக்கா தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு நிலையம் அமைத்து செயற்படுகிறது . ஆகவே எமது உரிமைகளை வென்றெடுக்க நாமே முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.அஹமட் சபீர், பிரதான முகாமைத்துவ உதவியாளர் யூ.எல்.ஆதம்பாவா , சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.


--- Advertisment ---