ஜோதிகா இல்லாமல் சூர்யா...

'காப்பான்' ரிலீஸாகி பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் ஒருபக்கம், திண்டுக்கல்லில் கார்த்தி பட ஷூட்டிங்கில் பிரச்னை ஒருபக்கம் என்றால், இதுபோக இந்து மதத்துக்கு எதிரானவர் என்ற விமர்சனம் எழ, அதற்கு நீண்ட விளக்கம் அளித்திருந்தார் சிவக்குமார். இப்படிக் கடந்த ஒரு வாரம் பரபரப்பாகவே இருந்தது சிவக்குமார் குடும்பம்.
இந்நிலையில், பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு சிவக்குமார் குடும்பம் மட்டும் வெளிநாட்டுக்குப் பறந்திருக்கிறது. அதாவது, சிவக்குமார், அவரின் மனைவி, சூர்யா, கார்த்தி, பிருந்தா என ஐவர் மட்டுமே இந்தப் பயணத்தில்.
sivakumar family
ஜோதிகா மற்றும் குழந்தைகள் இல்லாமல் சூர்யா, மனைவி, மகள் இல்லாமல் கார்த்தி, கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாமல் பிருந்தா என ஒரிஜினல் சிவக்குமார் குடும்பத்தின் ரீ-யூனியன் பயணமாம் இது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவக்குமார் குடும்பம் இப்படி ஒரு பயணம் மேற்கொண்டிருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தட்ட 10 நாள்கள் வெளிநாட்டில் இருப்பார்கள் என்கிறார்கள். குழந்தைகளுக்குக் காலாண்டு விடுமுறை நேரத்தை அடிப்படையாகவைத்தே இந்த பிளான் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் எந்த நாட்டுக்கு போயிருக்கிறார்கள் என்பது மட்டும் சஸ்பென்ஸாம்.
புது உற்சாகத்தோடு வாங்க மக்களே!


Advertisement