#APRECON2019


(க.கிஷாந்தன்)   
ஆசிய பசிபிக் மற்றும் ஓசியானியாவின் பொது பணித்துறையை சார்ந்த இளம் தொழிலாளர் தலைவர்களுக்கும் தலை சிறந்த தொழில் சங்க தலைவர்களுக்குமான பி.எஸ்.ஐ - பப்ளிக் சர்வீசஸ் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுபணித்துறை சார் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த  #APRECON2019 பேராளர் மகாநாட்டில் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பாக அருள்சாமி பரத் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இப் பேராளர் மகாநாட்டில் கலந்துக்கொண்ட இவர் நாட்டின் தொழிற்சங்க முன்னெடுப்புகள், தேசிய அளவில் அரசியல் மற்றும் தொழிற்சங்களில் இளைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச வணிக ஒப்பந்தங்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் மற்றும் தொழிற்சங்க முன்னெடுப்புகள், இளைஞர் அணியின் உதயம் என்பவற்றை பற்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தெற்காசியாவின் இளம் தொழிலாளர் தலைவர்களுக்கான ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பல துறைசார் தலை சிறந்த தொழில் சங்க தலைவர்களை சந்திக்கவும் அவர்களின் நுணுக்கங்களை அறிந்துக்கொள்ள வாய்பாகவும் இவருக்கு அமைந்துள்ளது.