ஊவாவில் புர்க்கா தடை சட்டம் அமுலில்


அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புர்க்கா அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊவா மாகாணத்தில் அந்த தடையுத்தரவை தொடர்ந்தும் அமுலில் வைக்குமாறு தான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவிக்கின்றார்.
ஊவா மாகாணத்தில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் புர்க்கா அணிந்து யாரேனும் நடமாடுவார்களாயினும், அவர்களை கைது செய்து விசாரணைகளை நடத்துமாறு தான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஊவா மாகாண வானொலி சேவையொன்றில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமயத்திற்காக, நாட்டையும், இனத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் ஒருபோம் இனவாதி கிடையாது என கூறிய அவர், முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளான தருணத்தில் தான் ஞானசார தேரருக்கு எதிரான செயற்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.