ரஷ்யா மீண்டும் ஐந்து ஆண்டுகளில் வல்லரசாக உருவெடுத்துள்ளதா?


ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம்.
ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது.
விளாடிமிர் புதினின் ரஷ்யா இந்த சிந்தனையைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டை திரும்பிப் பாருங்கள்

கிரீமியாவை ரஷியா இணைத்துக் கொண்டு கிழக்கு உக்ரேனில் ராணுவத் தலையீடு செய்ததைத் தொடர்ந்து, - மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ஆளான - மாஸ்கோ தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட நாடாகத் தோன்றியது.
கிரெம்ளின் மீது நெருக்குதல் காட்டினால் அதிபர் புதினின் போக்கு மாறும் என்ற நம்பிக்கையில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அவருடைய செயல்பாட்டை விமர்சனம் செய்தனர். ``பிராந்திய வல்லமை கொண்ட'' நாடாக ரஷ்யாவைக் கருத முடியாது என்று அதிபர் பராக் ஒபாமா நிராகரித்தார். முன்னாள் வல்லரசான ரஷ்யாவுக்கு அது காயம் ஏற்படுத்துவதாக இருந்தது.
விளாடிமிர் புதின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வேகமாக 2019க்கு வருவோம்

இப்போது உலகளாவிய ஆதிக்கத்தை ரஷ்யா முன்னெடுத்துச் செல்கிறது. டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது என்று அமெரிக்கப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தனது பங்களிப்பை அதிகரித்துக் கொள்ள ரஷியா முயல்கிறது. ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

மத்திய கிழக்கில் சமரசம் செய்யும் சக்தி

மத்திய கிழக்கில் மாற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மாஸ்கோ தொடங்கிய நான்கு ஆண்டுகள் கழித்து, அந்தப் பிராந்தியத்தில் முக்கிய சக்தியாக அமெரிக்காவுக்குப் பதிலாக ரஷியா உருவாகி வருகிறது, அந்தப் பிராந்தியத்தில் அதிகார சமரசம் ஏற்படுத்தும் சக்தியாக மாறி வருகிறது.
சில நாட்கள் இடைவெளியில், துருக்கி அதிபருடன் விளாடிமிர் புதின் தொலைப்பேசி மூலம் பேசி, மாஸ்கோவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் தொலைப்பேசி மூலம் அவர் பேசியுள்ளார். அவர்கள் ``பாதுகாப்பு விஷயங்கள்'' பற்றி விவாதித்துள்ளனர். சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.
மத்திய கிழக்கில் சமரசம் செய்யும் சக்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
மத்திய கிழக்கில் ரஷ்யாவின் தீவிர பங்களிப்பு அதிகரித்து வருவதன் அடையாளமாக இந்தச் செயல்பாடுகள் உள்ளன.
இந்த விமானம் ரஷியாவின் தேசியக் கொடியை வரைந்து காட்டும் வகையில் புகை கக்கிச் சென்றது.படத்தின் காப்புரிமைREUTERS
Image captionஅக்டோபர் 15 ஆம் தேதி திரு. புதின் அபுதாபி சென்ற போது நடந்த நிகழ்ச்சியில் இந்த விமானம் ரஷியாவின் தேசியக் கொடியை வரைந்து காட்டும் வகையில் புகை கக்கிச் சென்றது.
ரஷ்யாவின் மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமோலெட்ஸ் - என்ற டேப்லாய்ட் பத்திரிகை இந்த மாற்றம் பற்றிப் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளது:
``ஹென்றி கிஸ்ஸிங்கர் (அதிபர் நிக்சன் காலத்தில் வெளியுறவுச் செயலராக இருந்தவர்) காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில், மத்திய கிழக்கின் இப்போதைய சூழ்நிலை உள்ளது. அவருடைய `உலகளாவிய அரசியல் சதுரங்கம்' என்ற சிந்தனைக்கு உட்படாததாக உள்ளது. அமெரிக்கா என்ற பிரமாண்டமான ஜாம்பவான் பகல் வெளிச்சத்திலேயே காணாமல் போய்விட்டது... ரஷ்யாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த விளையாட்டில் முன்னணியில் உள்ளது.''
``உலக அளவில் சமரசம் செய்யும் சக்தியாக, அரசியல் சமரசம் ஏற்படுத்தும் பங்கை ரஷ்யா ஆற்றி வருகிறது. எந்த பிராந்திய சக்தியும் அதைப் புறக்கணித்துவிட முடியாது.''
சிரியா - துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறுவது என்று டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு, மாஸ்கோவில் வெளிநாட்டுக் கொள்கை நிபுணர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
``அமெரிக்கர்கள் புத்திசாலிகள் என்பதைப் போன்ற ஆழமான நம்பிக்கை காணப்படுகிறது'' என்று ரஷிய வெளியுறவுக் கொள்கை நிபுணரும், கிரெம்ளினுக்கு நெருக்கமானவருமான பியோடோர் லுக்யனோவ் கூறுகிறார். ``அமெரிக்கா ஏதாவது முட்டாள்தனமாகச் செய்தால், அவர்கள் முட்டாள்கள் என்பதால் அல்ல. ஆனால் அவர்களுடைய பெரிய திட்டத்தை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கலாம்.''
மீண்டும் வல்லரசு ஆகிறாதா ரஷியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``அமெரிக்கர்கள் முழுக்க கேலிக்குரிய செயல்களைச் செய்வார்கள் என்று ரஷ்யர்கள் பலரால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றாகிவிட்டது'' என்று அவர் கூறியுள்ளார்.

சிரியா: ரஷியா ஏன் வெல்கிறது

வடகிழக்கு சிரியாவில் இப்போதுள்ள சூழ்நிலையால் பல வகைகளில் மாஸ்கோவுக்கு ஆதாயங்கள் கிடைக்கும்.
•அதிபர் ஆசாத்துக்கு அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் முதன்மையான பக்கபலமாக ரஷியா உள்ளது. சிரியாவுக்கு அதிக எல்லை கிடைத்தால் அது மாஸ்கோவுக்கு நல்லது.
•குர்துகளை கைவிட்டதன் மூலம், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மீதான நம்பிக்கைக்குரிய பங்காளர் என்ற எண்ணம் தகர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் - மத்திய கிழக்கில் அனைத்து தரப்பினருக்கும் - அமைதியை உருவாக்கக் கூடிய, ஒரே சமரச சக்தியாக ரஷியா மட்டுமே இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு இது வழிவகுத்துள்ளது. சிரியா மற்றும் துருக்கி படைகளின் தொடர்பு எல்லைக்கு அருகே ரஷ்யாவின் ராணுவ காவல் படை ஏற்கெனவே கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்றால், ரஷ்யாவை நாடுங்கள் என்பது தான் இதன் மூலம் தெரிவிக்கப்படும் தகவலாக உள்ளது.
•கடந்த சில ஆண்டுகளாக மேற்கு நாடுகளின் கூட்டணியை, குறிப்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவை பலவீனப்படுத்த மாஸ்கோ முயற்சி செய்து வருகிறது. உறுப்பு நாடுகளுக்கு இடையில் உள்ளக் கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி இந்த முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருகிறது. சிரியா பிரச்சினையில் துருக்கிக்கும், மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உரசல், ரஷ்யாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. நேட்டோவுக்குள் பிளவை உருவாக்க மாஸ்கோ முயல்கிறது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக வான்பரப்பு பாதுகாப்பு ஏவுகணைகளைத் துருக்கி வாங்கியது குறித்து ஏற்கெனவே அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது.
``பாதுகாப்பு மண்டலம்'' முழுமை பெறும் வரையில் சிரியா தாக்குதல் தொடரும் என்கிறது துருக்கி
2015 ஆம் ஆண்டில் சிரியாவில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியபோது, சர்வதேச பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது தான் தங்கள் நோக்கம் என்று கிரெம்ளின் கூறியது. ஆனால் மத்திய கிழக்கில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் உருவாக்குவது தான் முக்கியமான கருத்தாக இருந்தது.

இந்த இரு சிரிய வீரர்களுக்குப் பின்னால் நிற்கும் ரஷிய வீரர்கள், டார்ட்டஸ் கடற்படை முகாமில் உள்ள ராணுவப் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
டார்ட்டஸ் கடற்படை முகாமில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதி முழுவதையும் ரஷியாவின் ராணுவ சக்தியால் குறிவைக்க முடியும். லட்டாக்கியா அருகில் உள்ள விமானப் படை தளத்திற்கும் மாஸ்கோ செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகார மாற்றத்தின் மிச்சமா?

உலக அரங்கில் ரஷியா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருவது, மேற்கத்திய நாடுகளில் அரசியல் சுயபரிசோதனை நடைபெறும் காலத்துடன் சேர்ந்து அமைந்துள்ளது.
மீண்டும் வல்லரசு ஆகிறாதா ரஷியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகார அமைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தங்கள் நலனில் அதிகம் அக்கறை காட்டுபவையாக உள்ளன'' என்று பியோடோர் லுக்யனோவ் நம்புகிறார். ``ரஷியாவை தனிமைப்படுத்த முயற்சித்த, ரஷிய எதிர்ப்பாளர்கள், கணிசமான அளவுக்கு மாற்றத்தின் பிடியில் சிக்கி இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அதற்கு மாறாக, வெளிப்புற அழுத்தங்களுக்கு ஆட்படாமல் அதிக பொறுமை காட்டிய ரஷியா மத்திய கிழக்கில் திறமையாக காய்களை நகர்த்தி வருகிறது'' என்று அவர் கூறுகிறார்.
middle east map
அழுத்தங்களைத் தாங்குதல் மற்றும் திறமை - நிச்சயமாக. அதிகரித்துள்ள செல்வாக்கு - நிச்சயமாக. ஆனால் மீண்டும் தலைதூக்கும் ரஷியாவுக்கு, சறுக்குதல் அபாயங்களும் இருக்கின்றன.
இந்த நாடு பொருளாதார ரீதியில் வல்லரசு கிடையாது. ரஷியாவின் பொருளாதாரம் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பில் உள்ளது. இன்னும் தேக்கம் ஏற்பட்டால், மாஸ்கோவின் உலகளாவிய லட்சியங்கள் கட்டுப்படுத்தப்படலாம்.
மத்திய கிழக்கைப் பொருத்த வரையில், அந்தப் பிராந்தியம் பல முகங்களைக் கொண்டது, பிரிவினைகள், நம்பிக்கையின்மை, வெறுப்பு போன்றவை நிறைந்தது. சமரசம் ஏற்படுத்தும் சக்தியாக ரஷியா தலை எடுத்திருக்கலாம். ஆனால், அமைதியை நிலைநாட்டுவதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டுமானால், சமநிலையிலான ராஜதந்திர நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது என்று கருதப்படுகிறது.