மீனவர்களுக்கு எச்சரிக்கை..!


இன்றும் நாளையும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. அங்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதனால் அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் அடுத்த 4 நாட்களுக்கு டெல்டா, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதுமுதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் மழை தொடர்ந்தது. மேலும் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவழை மிதமாக பெய்துள்ளது.
ஒருசில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 4 நாட்களை பொறுத்தவரை தமிழகம், புதுவையின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், மேற்கு தெடர்ச்சி மலை உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னை நகரை பொறுத்