நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 120 முறைபாடுகள்




(க.கிஷாந்தன்)
நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 120 முறைபாடுகள் கிடைத்திருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகள் சுமூகமான நிலையில் நடைபெறுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 488 வாக்குசாவடிகளுக்கும் 15.11.2019 அன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஷ்பகுமார தெரிவித்தார்.
(15.11.2019) அன்று காலை 10.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
நுவரெலியா மாவட்டத்தில் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 28 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த நிலையங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புகளுடன் வாக்குசீட்டுகளும், வாக்குப்பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் 256 வாக்குசாவடிகளும், கொத்மலை தொகுதியில் 81 வாக்குசாவடிகளும், வலப்பனை தொகுதியில் மூன்று இடங்களில் இரட்டை வாக்கு சாவடிகள் உட்பட 76 வாக்கு சாவடிகளும், ஹங்குராங்கெத்த தொகுதியில் 75 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 39 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்காக 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களில் 6800 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1590 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர். 
நுவரெலியா மாவட்டத்தில் தபால் வாக்காளர்களாக 18124 பேர் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த தேர்தல் நடவடிக்கைக்காக 522 வாகனங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 350 தனியார் வாகனங்களும் 172 அரச வாகங்களும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.