எரிபொருள் நிலையங்களுக்கு அருகே கடுமையான நெரிசல்

திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பரவிய  தகவலால் இன்று (09) காலை முதல், வவுனியா உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரான், ஈராக் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தகவல் பறிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, எரிபொருளை சேமிக்க பொதுமக்கள் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.


Advertisement