அடிக்கல் நாட்டும் வைபவம்

 (க.கிஷாந்தன்)
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 16.02.2020 அன்று முற்பகல் இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைய இந்திய அரசாங்கத்தின் 125 மில்லியன் நிதியுதவியின் கீழ் இவ் கேட்போர் கூடம் அமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப், இலங்கைக்கான இந்திய உதவி தூதுவர் திரேந்திர சிங் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி பயிர் செய்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆகியோருடன் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார் அடங்களாக அட்டன் நகர சபை தலைவர், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.Advertisement