விபத்து

(க.கிஷாந்தன்)

 

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில்  குடாகம பகுதியில் வைத்து  இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

 

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

 

கம்பளையிலிருந்து  நுவரெலியா நோக்கி பயணித்த வேனும், தலவாக்கலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

வேன் சாரதியின் கவனயீம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

 

வேன் சாரதியும், லொறியில் பயணித்த இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வேனும், லொறியும் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.Advertisement