அமரர் ஆறுமுகனுக்கு, அம்பாறை மாவட்டத்தில் அஞ்சலி

பாறுக் ஷிஹான்

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில்  இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள   பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை(31) முற்பகல்  ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இவ்வஞ்சலி நிகழ்வை கல்முனை பாண்டிருப்பு வாழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளதுடன்   இந்த அஞ்சலி நிகழ்வில் சிவ ஸ்ரீ தங்கவேல்  குருக்கள் சமூக சேவகர்கள் இளைஞர்கள் என  பலர் கலந்து கொண்டனர்

இதே வேளை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியிலும் இளைஞர்களினால் அமரர் தொண்டமானின் உருவப்பட பதாதை அஞ்சலி செலுத்தும் முகமாக சந்திக்கு சந்தி தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Advertisement