உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்


இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


கட்டார் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் உள்ள வறிய மக்களுக்கான சுமார் 7 ஆயிரம் ரூபாய் பெறுமதியான  உலருணவு நிவாரண பொருட்கள் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30)  காலை வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளை தலைவர் சுனில் திஸ்ஸாநாயக்க, சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரப் , செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளை நிருவாக உத்தியோகத்தர் சந்திரிக்கா அபேரத்ன , செஞ்சிலுவை சங்கத்தின் ஊழியர்கள் ,பொலிஸார் , பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.


Advertisement