ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது


அமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ,முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் உட்பட 43 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துறைமுக பொலிசுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

முன்னிலை சோஷலிச கட்சியினால் அமெரிக்க தூதுவராலயம் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தடையுத்தரவை பிறப்பித்தது.Advertisement