வாழ்க்கை, கலைந்தோடும் முகிலானது


பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த நிலையில் இருப்பது குறித்த தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தெரிவித்ததாக பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட தகவலை மும்பை காவல்துறை அதிகாரி மனோஜ் குமார் பிபிசி செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுஷாந்தின் தற்கொலை பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்பூத்படத்தின் காப்புரிமைSPICE PR

யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்?

தொலைக்காட்சியிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வருடங்களிலேயே பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்படத்தின் காப்புரிமைAFP
Image captionசுஷாந்த் சிங் ராஜ்புத்

'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் கதாநாயகனாக நடித்த 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொலைக்காட்சி தொடர் மிகவும் பிரபலமானது.

பிரபலங்கள் இரங்கல்:

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"ராஜ்புத்தின் தற்கொலை குறித்த செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துவிட்டது. சிசோரே திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து உற்சாகமடைந்ததுடன் அந்த படத்தில் நானும் நடித்திருக்க வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அத்தகைய திறமையான நடிகர் அவர். அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் அளிக்கட்டும்" என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"வாழ்க்கை எளிதில் முறியக் கூடியது. ஒருவர் தனது வாழ்க்கையில் எதை எதிர்கொண்டு இருக்கிறார் என்பது நமக்கு தெரியாது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த செய்தி பொய்யானதாக இருக்ககூடாதா" என இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"கடைசியாக சுஷாந்த் சிங்கை பார்த்தபோது, அவர் நடித்த 'கேதர்நாத்' திரைப்படம் நன்றாக இருந்தது என வாழ்த்து சொன்னேன். அவர் என்னிடம் சிசோரே படம் பாருங்கள் என கூறினார். தற்போது வந்துள்ள இந்த தற்கொலை செய்தி அதிர்ச்சியாக உள்ளது" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.