விபத்து: ஓட்டமாவடி கலீல் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிள் - பட்டா விபத்து: ஓட்டமாவடி கலீல் உயிரிழப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, மீயான்குளப் பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து மோட்டார் கைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது பின்னால் சென்ற சிறிய ரக பட்டா வாகனம் மோதியதில் குறித்த நபர் பட்டா வாகனத்துடன் நீண்ட தூரம் இழுபட்டுச் சென்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி முதலாம் வட்டாரம், முக்தார் வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான வரிசை முகம்மது கலீல் (வயது 50) என்பவராவார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸா பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Advertisement