தேர்தல் ஒத்திகை

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் தற்போது அம்பலங்கொட வெலிகொட தம்மாயுக்திகராம விகாரையில் நடைபெற்று வருகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வாக்களிப்பு நிலைமை தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

இதன்போது கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Advertisement